புதுடில்லி: நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக,
பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியும், அவரது, 'ரிபப்ளிக்' சேனலும், தவறான தகவல்களை வெளியிட்டு வருவது, வழக்கு விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில், பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. குற்ற வழக்கு விசாரணைகள் குறித்து, செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளுக்கு, வரைமுறைகளை வகுக்கவும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

சி.எப்.ஓ.,வுக்கு சம்மன்
‛டிவி'யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும், டி.ஆர்.பி., ரேட்டிங்கை கணக்கிடும் பணியினை, பி.ஏ.ஆர்.சி., எனப்படும், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில், தனியார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செய்து வருகிறது.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில், பார்வையாளர்களின் எண்ணிக்கையை கணக்கிடும் முறையில், மோசடியில் ஈடுபட்டதாக, ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ‛ரிபப்ளிக் டிவி' மற்றும் இரு மராத்தி மொழி சேனல்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், ‛ரிபப்ளிக் டிவி'யின் தலைமை நிதி அதிகாரியை, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி, மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Comments