தினமலர் செய்தி : சென்னை : 'தமிழக சட்டசபை, அடுத்த மாதம், 4ம் தேதி கூடுகிறது' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த ஆகஸ்ட், 12ம் தேதி முடிவடைந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
ஒரு கூட்டத் தொடரின் கடைசி
அமர்வுக்கும், அடுத்த கூட்டத்தொடரின் முதல் அமர்வுக்கும் இடையே உள்ள கால
அளவு, ஆறு மாதங்களுக்கு குறைவாக இருத்தல் வேண்டும்.இதற்கிடையில்,
'டிசம்பரில் சட்டசபையை கூட்ட வேண்டும்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின்,
கோரிக்கை விடுத்தார். இதன் காரணமாக, டிசம்பரில் கூட்டம் நடைபெற வாய்ப்பு
குறைவு என, எதிர்பார்க்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர், கடந்த ஆகஸ்ட், 12ம் தேதி முடிவடைந்தது. லோக்சபா தேர்தலுக்கு முன், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு, மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
இந்நிலையில், நேற்று காலை, முதல்வர் பன்னீர்செல்வம் ஜெயலலிதாவுடன் ஆலோசித்தார். நேற்று மாலை, 'சட்டசபை கூட்டம், டிசம்பர், 4ம் தேதி காலை, 10:00 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள, சட்டசபை மண்டபத்தில் கூடும்' என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்தார்.சட்டசபை கூடும் நாளில், எத்தனை நாட்கள் கூட்டம் நடைபெறும் என்ற விவரம் தெரிய வரும்.கூட்டத்தில், பால் ஊழல், பருப்பு மற்றும் முட்டை வாங்குவதில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு, கிரானைட் ஊழலை விசாரிக்க,
ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு முட்டுக்கட்டை போட்டது, முல்லை பெரியாறு அணை பிரச்னை, கர்நாடகம் காவிரியில் அணை கட்ட முயற்சிப்பது, ஜெயலலிதா சிறை தண்டனை பெற்றது, போன்ற பிரச்னை குறித்து, எதிர்க்கட்சியினர் சட்டசபையில் எழுப்ப உள்ளனர்.எனவே, சட்டசபை பரபரப்பாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பன்னீர்செல்வம், முதன் முறையாக, சட்டசபையை முதல்வர் என்ற நிலையில் சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments