இந்திய எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்கள் குவிப்பு : மைக் பாம்பியா

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட குவாட் அமைப்பின் மாநாடு டோக்கியோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், நாடு திரும்பியுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அளித்த பேட்டி: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் சீன வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய மக்கள் பார்த்து வருகின்றனர். குவாட் அமைப்பில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்களை சந்தித்தேன். இந்த நாடுகள் பெரிய ஜனநாயக நாடுகள், சக்திவாய்ந்த பொருளாதாரம் கொண்டவை. நான்கு நாடுகளும், சீனாவினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன.

பல ஆண்டுகளாக, மேற்கத்திய நாடுகள், நம்மை மீறி செயல்பட சீனாவை அனுமதித்துள்ளன. அமெரிக்காவை, எங்களுக்கு முன்புஆட்சி செய்த அரசானது, எங்களின் அறிவுசார் சொத்துரிமை, லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை திருட அனுமதித்துள்ளன. குவாட் அமைப்பில் உள்ள மற்ற 3 நாடுகளிலும் இதுதான் நடந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களை சமாளிக்க, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியாவும் , நன்கு புரிந்து கொண்டு கொண்டு, கொள்கைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவுக்கு எதிரான இந்த போராட்டத்தில், அமெரிக்காவின் ஒத்துழைப்பு அந்த நாடுகளுக்கு நிச்சயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments