தோனியின் 5 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

புதுடில்லி: ஐ.பி.எல்.,லில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் 5 வயது மகளுக்கு சமூக வலைதளங்களில் பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி உட்பட மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. ஐக்கிய அரசு எமிரேட்சில் (யு.ஏ.இ) நடக்கும் 13வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமாக விளையாடி வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விளையாடியுள்ள 6 போட்டியில் வெறும் இரண்டு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, மற்ற அனைத்து போட்டிகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழத் தொடங்கியது.

வீரர்களின் சமூக வலைதளப் பக்கங்களிலும் ரசிகர்கள் திட்டி தீர்க்கின்றனர். ஆரோக்கியமான விவாதங்களும், விமர்சனங்களும் ஏற்றுக்கொண்டாலும், சிலர் எல்லை மீறி செயல்பட்டு வருகின்றனர். தோனி மீதான தங்களது வெறுப்பை தீர்த்து கொள்ள தோனியின் மகள், மற்றும் குடும்பத்தினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிலும் கற்பனை செய்ய முடியாத வகையில், ஒழுங்காக விளையாடவில்லையென்றால் தோனியின் ஐந்து வயது மகளான ஜிவாவை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என சிலர் கற்பழிப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவிட்டது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Comments