சென்னையில் கொரோனா கிடுகிடு.. மண்டல வாரியான பாதிப்பு விவரம் வெளியீடு

Zone wise breakup of Covid-19 positive cases in Chennai சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 15ம் தேதி காலை நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31896 ஆக உயர்ந்துள்ளது. இதில் 16671 பேர் குணம் அடைந்துள்ளனர். 14199 பேர் கொரோனா பாதிப்புடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரத்தில் அதிகபட்சமாக 5216 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தண்டையார்பேட்டையில் 4082 பேரும், கோடம்பாக்கத்தில் 3409 ஆகவும், தேனாம்பேட்டையில் 3844 ஆகவும், திருவிக நகரில் 2922 ஆகவும் கொரோனா பாதிப்பு உயர்ந்து உள்ளது. அடையாறில் 1805 பேருக்கும், அண்ணா நகரில் 3150 பேருக்கும் வளசரவாக்கத்தில் 1395 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 15ம் தேதி நிலவரப்படி சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம்.

திருவெற்றியூர் 1171, மணலி 448, மாதவரம் 854, தண்டையார் பேட்டை 4082, இராயபுரம் 5216, திருவிக நகர் 2922, அம்பத்தூர் 1105, அண்ணா நகர் 3150, தேனாம்பேட்டை 3844, கோடம்பாக்கம் 3409, வளசரவாக்கம் 1395, ஆலந்தூர் 624, அடையாறு 1805, பெருங்குடி 594, சோழிங்கநல்லூர் 586.

Comments