கொரோனா தடுப்பில் தோல்வி அடைந்த அதிமுக அரசு : பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேள்வி கனைகளை தொடுத்த ஸ்டாலின்

கொரோனா தொற்று பரவல் குறித்த பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு, காணொளி காட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆளும் அதிமுக அரசின் மீது கடும் குற்றசாட்டு மற்றும் அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்துள்ளார். 

கொரோனா தொற்று தமிழகத்தில் படு வேகமாங்க பரவிவரும் இந்த இக்கெட்டான சூழலில், அதிமுக அரசு எந்த எதிர்கட்சிகளையும் ஒரு பொருட்டாகவே கருதாமல், தான்தோன்றி தனமாக பல முடிவுகளை எடுத்து வருகிறது. அதன் முடிவுகளில் பல இன்று கொரோனாவின் ஆதிக்கத்தை தமிழகத்தில் நிலைநிறுத்த பெரும் காரணமாக இருக்கிறது. 

இந்த சூழ்நிலையில் திமுகவின் தலைவர் தொடர்ந்து கொரோனா குறித்தும், அதற்கான நிவாரண செயல்பாடுகள் குறித்தும் தனது தோழமை கட்சிகளுடன் ஆலோசித்து நடைமுறை படுத்தி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து பத்திரிக்கையாளர்களையும் காணொளி காட்சி மூலியமாக நேரலையில் சந்தித்தார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளும் அதிமுக ஆட்சியின் அலச்சிய போக்கையும், அதற்கு பின் இருக்கும் கேள்விகளையும் அடுக்கடுக்காக தொடுத்து இருக்கிறார். அவற்றில் சில... 

சமூக பரவல் இல்லை என்றால் தொற்று அதிகம் ஏன்? 

ஊரடங்கு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுக்களின் அறிக்கைகளின் நிலை என்ன?

அரசு உயர் அதிகாரிகளுக்கு இடையேயான பதவி போட்டியை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

அமைச்சர்கள் இடையிலான குழு சண்டையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளது 

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துங்கள் 

கொரோனாவால் உயிரிழந்த ஏழை, எளிய மக்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் 

கொரோனா பேரிடரை அரசு பொறுப்பற்று, மோசமாக நிர்வகிக்கிறது 

சென்னையில் 236 பேரின் மரணங்கள் மறைக்கப்பட்டு உள்ளதாக ஊடகச் செய்தியை சுட்டி அதன் உண்மை தன்மையை அரசு விளக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக அரசு கொரோனா மரணங்கள் விவரத்தை வெளியிட தாமதம் என்? கொரோனா நோய் சமூக பரவல் ஆகவில்லை என்று தவறான தகவலை அரசு கூறுகிறது 

மே 10-ல் கொரோனா தொற்றின் கேந்திரமாக கோயம்பேடு மார்க்கெட் மாறிவிட்டது 

மொத்த கொரோனா பாதிப்பில் 10%-ஐ சென்னை நகரம் கொண்டிருந்தது 

இந்தியாவிலேயே கொரோனா தொற்று அதிகம் உள்ள 2-வது மாநிலமாக தமிழ்நாடு மாறிவிட்டது 

கொரோனா தொற்று சென்னையில் மட்டும் 5.2% அதிகரித்து உள்ளது 

கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறந்தது வேதனையானது 

என பேட்டியளித்தார்.

Comments