டெல்லி: வங்கியின் வேலை நேரம் காலை 10 மணியில் இருந்து 2 மணி வரை செயல்பட்டு வரும் நிலையில் நாளை முதல் வழக்கமான சேவைகளுடன் வங்கிகள் முழுமையாக செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக வங்கியின் வேலை நேரம் கடந்த ஒரு வாரம் குறைக்கப்பட்டது. காலை 10 மணியில் இருந்து 2 மணி வரை வங்கிகள் இயங்கி வந்தன. அதுவும் அவசர தேவைக்கு மட்டும் வங்கிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், வங்கி கணக்கில் இருந்து பணம் மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய சேவைகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றன.
ஆனால் அனைத்து கடன் சேவைகளும் நிறுத்தி கடந்த 24-ந்தேதி முதல் காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. . பொது மக்கள் அவசர தேவைகளுக்கு ஏ.டி.எம். மையங்களை பயன்படுத்தி வருகிறார்கள். ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள் அவர்களுக்கு மத்திய அரசு 3 மாதங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறது. இதன்படி பிரதமர் மோடியின் திட்டத்தின்படி ஜன்தன் வங்கி கணக்கு தொடங்கிய பெண்கள் அனைவரது வங்கி கணக்கிலும் 3 மாதங்களுக்கு தலா ரூ.500 வீதம் போடப்பட உள்ளது. இதேபோல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவசமாக கேஸ் கணெக்சன் வாங்கிய பெண்களுக்கு அடுத்த 3மாதங்களுக்கு இலவசமாக கேஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் முதியோர், விதவைகள் உள்ளிட்டோருக்கு ரூ.1000 நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
இதனால் பொதுமக்கள் பலர் வங்கிக்கு சென்று பணம் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். இப்படி மொத்தமாக மக்கள் வந்தால் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் நாளை முதல் வங்கி சேவையை வழக்கமான சேவைகள் முழு அளவில் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே அனைத்து வங்கிகளும் நாளை (2-ந்தேதி) முதல் முழுமையாக செயல்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன.
Comments