***Exclusive டாப் கியரில் திமுக.. தேர்தலுக்காக ஸ்டாலின் உருவாக்கிய ஸ்பெஷல் முழக்கம்.. என்ன தெரியுமா!

வாசகம் சென்னை: சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக புதிய வாசகம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்தியா முழுக்க அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. அதே நேரத்தில் வேறு சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடக்கிறது. அந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலும், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்க வாப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தற்போது திமுக தீவிரமாக தயாராகி வருகிறது.

கூட்டம் நடந்தது இதற்காக இன்று திமுக சார்பில் கூட்டம் கூட நடந்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடந்தது. திமுகவின் எம்எல்ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

முடிவு செய்துள்ளனர் இந்த நிலையில் தேர்தலுக்கு எப்படி செயலாற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஊராட்சி வாரியாக இதற்காக பொறுப்பாளர்களும் கூட நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் நாடாளுமன்ற தேர்தலுக்காகவும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாசகம் இதற்காக திமுக சார்பில் முழக்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்று முழுக்கத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதை தமிழகம் முழுக்க பிரபலப்படுத்த உள்ளனர்.

பேச போகிறார்கள் மேலும் இதற்காக ஜனவரி 3 முதல் கிராம சபை கூட்டங்களை நடத்தி மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளது திமுக. கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திக்க முடிவெடுத்து உள்ளனர். இதன் மூலம் அனைத்து தேர்தலுக்கும் திமுக தயாராக இருப்பது தெளிவாகி உள்ளது.

Comments