கொரோனா.. 8 லட்சத்தை தாண்டிய எண்ணிக்கை.. உலகம் முழுக்க 38 ஆயிரம் பேர் பலி.. தற்போதைய நிலவரம் என்ன?

தமிழகம் எப்படி சென்னை: இந்தியாவில் கொரோனா வைரஸ் நினைத்து பார்க்க முடியாத வேகத்தில் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று 57 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. தஉலகம் முழுக்க இதனால் பலி எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

கொரோனா வைரஸ் உருவானது என்னவோ சீனாவில்தான். ஆனால் இப்போது இந்த வைரஸ் சீனாவில் வேகம் குறைந்துள்ளது. நாளுக்கு நாள் அங்கு இந்த வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. அங்கு மக்கள் பாதிக்கும் சதவிகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

உலகம் முழுக்க இதனால் 858,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 42,158 ஐ தொட்டுள்ளது . சீனாவில் தற்போது வரை 81,518 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே சமயம் 3305 பேர் பலியாகி உள்ளனர். நேற்று அங்கு 7 பேர் மட்டுமே இதனால் பலியானார்கள்.

பல உடல்கள் எங்கே
சீனா மிக கடுமையான சட்டங்கள் மூலம் இந்த வைரஸை கட்டுப்படுத்தி உள்ளது. பல்வேறு நகரங்களை மொத்தமாக மூடி அங்கு மக்களை ஒடுக்கி இந்த வைரஸை அரசு கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வருகிறது. அதேபோல் அங்கு நிறைய இடங்களை மருத்துவமனைகளாக மாற்றி மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதன் பலனாக அங்கு வைரஸ் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கொரோனா வைரஸால் அமெரிக்கா மற்றும் இத்தாலியில்தான் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. முக்கியமாக அங்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் மிக குறைவாக இருக்கிறது. அதேபோல் தொழில்நுட்ப கருவிகளும் மிக குறைவாக இருக்கிறது. இதனால் அங்கு நோய் தாக்குதலுக்கு உள்ளான நபர்களை சிகிச்சை அளிக்க முடியாமல் அரசு கடுமையாக திணறி வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் காரணமாக வீட்டிற்கு உள்ளேயே பலர் பலியாகும் நிலை இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இவர்களின் உடலை கூட அரசு வந்து அங்கு எடுக்கவில்லை என்று புகார் உள்ளது. கொரோனா காரணமாக அமெரிக்காவில் 188,578 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 3,890 பேர் பலியாகி உள்ளனர். இத்தாலியில் 105,792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12428 பேர் இந்த வைரஸால் பலியாகி உள்ளனர்.

இதன் மூலம் இத்தாலியில் பலி எண்ணிக்கை சீனாவை முந்தி உள்ளது. இத்தாலியில் கொரோனா இறப்பு சதவிகிதம் மிக அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அங்கு அரசு மொத்தமாக இதில் தோல்வி அடைந்துள்ளது. அங்கு அரசு தங்களை கைவிட்டுவிட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் இன்னொரு பக்கம் இன்னொரு பக்கம் ஸ்பெயினில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கு 95,923 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. 8434 பேர் பலியாகி உள்ளனர்.
ஆனால் என்ன
ஜெர்மனியில் 71,808 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 775 பேர் பலியாகி உள்ளனர். பிரான்சில் 52,128 பேருக்கு கொரோனா தாக்கியுள்ளது. அங்கு 3204 பேர் பலியாகி உள்ளனர். யூகேவில் 25120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1048 பேர் பலியாகி உள்ளனர். உலகம் முழுக்க இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால்தான் இதை உலக பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 44,605 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2898 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.அதே சமயம் ஈரான் இந்த மரணங்களை மறைத்து வருகிறது. அங்கு 5000 க்கும் அதிகமான நபர்கள் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது. ஈரான் அதை மறைக்கிறது. அங்கு பல உடல்கள் புதைக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளது.

பல உடல்கள் கருப்பு பைகளில் வையாக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இதனால் ஈரானை உலக நாடுகளை கண்டிக்க தொடங்கி உள்ளது. அதே போல் இன்னொரு பக்கம் தென் கொரியாவில் 9,786 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அங்கு இதுவரை இந்த வைரஸால் 162 பேர் பலியாகி உள்ளனர். தென் கொரியா இந்த வைரஸை கட்டுப்படுத்தி வருகிறது.

தென்கொரியாவில் ஷின்சேன்ஜி என்ற மத அமைப்பு உள்ளது. இது கிறிஸ்துவத்தில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு மத குழு ஆகும்.இந்த அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட 9000 பேரில் 4500 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. தென் கொரியாவில் சர்ச் மூலம்தான் பலருக்கும் கொரோனா வைரஸ் பரவியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் 1750 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 124 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில்தான் இந்த வைரஸ் வேகம் எடுத்துள்ளது. மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 16 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தமாக 325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நேற்று புதிதாக 6 பேருக்கு வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதில் 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா அரசு மிக கடுமையாக திணறி வருகிறது. இந்தியாவில் இதுவரை 53 பேர் இதனால் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 105 பேர் இதனால் பாதிக்கப்பட்டுளள்னர. இவர்களுக்கும் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது ஸ்டேஜ் 2 கொரோனா வைரஸ் மட்டும் பரவி வருகிறது.

இரண்டாவது வகை பரவல் ஸ்டேஜ் 2. இது கொரோனா தாக்கி, வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் நபர் ஒருவர் மூலம் அவரின் உறவினர்களுக்கும் வைரஸ் தாக்கினால் அதுதான் ஸ்டேஜ் 2. அதாவது சீனாவில் இருந்து டெல்லிக்கு ஒருவர் வருகிறார். அவருக்கு கொரோனா இருக்கிறது. அவர் மூலம் அவருடைய வீட்டில் இருக்கும் உறவினர்களுக்கும் கொரோனா ஏற்பட்டால் அது ஸ்டேஜ் 2. இதை local transmission என்று அழைப்பார்கள்.

உங்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் உடனே சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுக்கவும். மருத்துவமனைக்கு தனியாக செல்வதை விட இது சிறப்பு. இதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இலவச உதவி எண் : +91-11-23978046 அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நான்கு உதவு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044 2951 0400, 044 2951 0500, 94443 40496, 87544 48477 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments