ஜேஎன்யூ தாக்குதலை திட்டமிட்டு செய்த ஏபிவிபி.. பரபர வாட்ஸ் ஆப் ஆதாரங்கள்.. விசாரிக்கும் டெல்லி போலீஸ்

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளியாகி வருகிறது. இதில் இடதுசாரி மாணவர்களை, அங்கிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவர்கள்தான் தாக்கியது என்பது குறித்து நிறைய ஆதாரங்கள் வெளியானது. வடஇந்திய ஊடகங்கள் இது தொடர்பாக நிறைய உண்மைகளை வெளியிட்டது.
இந்த நிலையில் இன்று டெல்லி சார்பாக சில முக்கிய தகவல்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி, ஜேஎன்யூ தாக்குதலில் ஈடுபட வேண்டும் என்பதற்காக வாட்ஸ் ஆப் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு இடதுசாரிகளுக்கு எதிராக ஒன்று சேர்வோம் என்று பொருள்படும் வகையில் 'Unity against Left' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் 60 பேரில் மொத்தம் 37 பேரின் அடையாளத்தை போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இதில் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள். இதில் 10 பேர் அங்கு படிக்காத வெளியாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளே இருந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உதவியுடன் இவர்கள் ஹாஸ்டல் உள்ளே வந்து இருக்கிறார்கள். இதில் ஏபிவிபி அமைப்பின் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் இருந்ததும் உறுதியாகி உள்ளது. இவர்தான் இந்த திட்டத்தை முன்னிருந்து வகுத்து இருக்கிறார்.
அந்த குழுவில் மாணவர்களை எப்படி தாக்க வேண்டும். எங்கிருந்து இரும்பு பொருட்கள், ஆசிட்களை கொண்டு வர வேண்டும். கேட் வாசலில் எத்தனை பேர் நிற்க வேண்டும், என்று விவாதித்து இருக்கிறார்கள். மாணவர்களை தாக்க இதில்தான் பிளான் போட்டுள்ளனர்.
ஆனால் ஜேஎன்யூ செயலாளர் மனிஷ் ஜங்கித் என்னுடைய போன் உடைந்து, அதை சரி செய்ய கொடுத்த போது, யாரோ தன்னை அந்த குழுவில் சேர்த்துவிட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார். இவரை போலீசார் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.
Comments