
தாம்பரம், தரமணி, கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், கோடம்பாக்கம், குரோம்பேட்டை, அசோக் நகர், ஈக்காடுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் வடசென்னையின் தண்டையார்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பதிவானது. ஏற்கனவே டிசம்பர் மாதம், இதமான தட்ப வெப்பம் நிலவும் சென்னையில், மழையும் சேர்ந்து கொண்டதால் இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவியது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் இயல்பைவிட குறைவான அளவுக்குத்தான் சென்னையில் மழை பதிவாகி உள்ளது. இனிவரும் நாட்களிலும் மழை தொடர்ந்து, மழை பற்றாக்குறையை ஈடு செய்தால்தான், தண்ணீர் பிரச்சனையை, தாக்குபிடிக்க முடியும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது.
Comments