
இந்நிலையில் இந்த வார இறுதியில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வியாழன் தொடங்கி சனிக்கிழமை வரை சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர். இதன்படி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
இதேபோல் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலைமையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தங்களது அறிவிப்பில் கூறியுள்ளனர்.
Comments