
இந்நிலையில் திமுக தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த விடமால் வழக்கு போடுவதாக விமர்சனங்கள் எழுந்தது. இது தொடர்பாக விளக்கம் அளித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறும் போது உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திராவிட முன்னேற்ற கழகத்தின் நோக்கம் என்றும் முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் தாங்கள் சந்திக்க தயார் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக தவறான குற்றச்சாட்டு சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை என்றார்.
உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை என்று கூறிய ஸ்டாலின், . நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யாமல் இருப்பதாகவும் புதிய மாவட்டங்களுக்கான மறு வரையறையும் இன்னமும் செய்யப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளதாகவும். யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேட்டியில் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
Comments