
இது மிகப் பெரும் சர்ச்சையானது. பொதுக் கூட்டங்களில் கோட்சேவை புகழ்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரக்யாசிங், நாடாளுமன்றத்திலும் அதேபோல் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சு சபை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, சாத்வி பிரக்யாசிங்கின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரை பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது போன்ற கருத்துகளையோ தத்துவங்களையோ பாஜக ஒரு போதும் ஆதரிக்காது. மேலும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக குழு கூட்டங்களில் அவர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Comments