
சென்னை: சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தெற்கு மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, தேனி, சேலம், மதுரை, தருமபுரி, நாமக்கல், திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். புல் புல் புயல் காரணமாக மீனவர்கள் மத்திய மேற்கு வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் சங்ககிரியில் 12செ.மீ., புதுக்கோட்டையில் 9செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு புவியரசன் கூறினார்.
Comments