
இதையடுத்து லேண்டருடனான சிக்னலை பெற நாசாவுடன் இணைந்து இஸ்ரோ முயற்சித்தது. ஆனால் அது முடியவில்லை. இதையடுத்து சந்திரயான் 3 திட்டத்தை வடிவமைக்க இஸ்ரோ முயற்சித்து வருகிறது.
இதுகுறித்து இஸ்ரோ கூறுகையில், சந்திரயான் 3 குறித்து திட்ட அறிக்கை தயார் செய்ய உயர் மட்ட குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த அறிக்கை திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மையம் தலைமையில் தயாரிக்கப்படும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் சந்திரயான் 3 திட்டத்தை உருவாக்குவதற்கான வழிமுறைககளை அந்த கமிட்டி வழங்கிவிடும். இந்த முறை ரோவர், லேண்டர் மற்றும் தரையிறங்கும் இயக்கங்கள் குறித்து கவனத்தில் கொள்ளப்படும்.
சந்திரயான் 2 வில் இருந்த தவறுகள் இந்த முறை திருத்திக் கொள்ளப்படும். பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் வெற்ற பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். இந்த திட்டம் அடுத்த நவம்பர் மாதம் செயல்படுத்தப்படும். சந்திரயான் 3-க்கிற்காக உருவாக்கப்படும் லேண்டரின் கால்கள் வலுவுடையதாகவும் எந்த சூழல் ஏற்பட்டாலும் தரையிறங்கும் போது திறனுடன் இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
Comments