அகிலேஷுக்கு ஓட்டு போட சொன்னதால் ஆத்திரம்.. மாற்றுத்திறனாளியின் வாயில் குச்சியால் குத்திய பாஜக தலைவர்

BJP leader assaults specially disabled youth in Sambhal for negative comment on BJP லக்னோ: அகிலேஷுக்கு வாக்களியுங்கள் என கூறியதால் ஆத்திரமடைந்த பாஜக தலைவர் ஒருவர், அந்த நபர் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது வாயில் குச்சியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜகவை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என பல்வேறு கட்சிகள் முயற்சித்து வருகின்றன.

இதற்காக பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. இந்நிலையில் சம்பல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் பாஜகவுக்கு எதிராக பேசி வந்தார்.

மேலும் அகிலேஷ் யாதவுக்கே ஓட்டுகளை போடுமாறு சொல்லி வந்தார். அப்போது அவ்வழியாக வந்த பாஜக தலைவர் முகமது மியா இதை கேட்டு ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து அந்த நபர் மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது வாயில் குச்சியை விட்டு மியா குத்துகிறார். இது பார்க்கும் போது பாஜகவின் சகிப்புத்தன்மை எந்த அளவுக்கு உள்ளது என்பதை காட்டுகிறது.

Comments