
சமூக வலைதளம் மூலம் காதல் இதனை மறைத்து சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாணியம்பாடியைச் சேர்ந்த கலா (25) என்ற இளம்பெண்ணிடம் பழகி உள்ளார். சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒப்பந்த பணியாளாக வேலை செய்து வருவதாக கூறி சமூக வலைத்தளம் மூலம் காதலை தெரிவித்துள்ளார்.
உல்லாசம் இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த மனோஜ்குமார், இளம்பெண்ணை காண ஓடோடி வந்துள்ளார். வாணியம்பாடிக்கு சென்று தனது சமூக வலைதளம் மூலம் பழக்கமான கலாவை சந்தித்துள்ளார். அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாணியம்பாடியிலே லாட்ஜில் ரூம் எடுத்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இளம்பெண் புகார் அதன்பிறகு சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று உல்லாசம் இருந்ததாகவும் தெரிகிறது. பின்னர், மனோஜ்குமாருக்கு திருமணமானது அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. பணத்தை கொடுத்து இதோடு காதலை முறித்து கொள்ளலாம் என்றார் மனோஜ்குமார். அதிர்ந்து போன கலா வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தர்ணா போராட்டம் அங்கு அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை கட்ட பஞ்சாயத்து செய்து வைக்க முயற்சிகள் செய்தாக கூறப்படுகிறது. இதற்கு ஒத்து கொள்ளாத இளம்பெண் தனக்கு நியாயம் கிடைக்கக்கோரி வேலூர் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். போலீஸார் அலட்சியமாக பேசியதாக கூறி கலா வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்ததாக கூறி தர்ணா போராட்டம் செய்தார்.
மருத்துவமனையில் அனுமதி போலீஸார் இளம்பெண்ணை மீட்டு விசாரணை நடத்தி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் பரிசோதனை செய்த டாக்டர் விஷம் அருந்தவில்லை என தெரிவித்து கலாவை வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரவு முழுவதும் தங்கவைக்கபட்டார்.
மனோஜ் தலைமறைவு பின்னர் இளம்பெண்ணிடம் வாணியம்பாடி மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்துள்ளனர். மனோஜ்குமார் தலைமறைவு ஆனதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரது தந்தை நாகேஷை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Comments