கூட்டணிக்கு ஆர்வம் இல்லை: தே.மு.தி.க., அதிர்ச்சி

Lok Sabha Elections 2019,DMDK, Actor Vijayakanth, Premalatha, தேமுதிக, தேமுதிக கூட்டணி, விஜயகாந்த், லோக்சபா தேர்தல் 2019,  நடிகர் விஜயகாந்த்,  பிரேமலதா, பார்லிமெண்ட் தேர்தல், 
 DMDK alliance, Vijayakanth,   Parliament Election,சென்னை: தே.மு.தி.க.,வின் தலைவர் நடிகர் விஜயகாந்துக்கு உடல் நிலை சரியில்லாததைத் தொடர்ந்து, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு அவரது மனைவி பிரேமலதா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிப்பது என முடிவெடுத்தனர்.
இதற்கான பணிகளில் விஜயகாந்தின் மொத்த குடும்பத்தினரும், கட்சியின் மேல் மட்டத் தலைவர்களும் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

ஆர்வம் காட்டாத கட்சிகள்;

இந்நிலையில், பார்லிமெண்ட் தேர்தலும் நெருங்குவதால், கூட்டணி அமைப்பது குறித்தும், கட்சியின் மேல் மட்ட அளவில் ஆலோசனைகள் நடந்துள்ளது. அந்த ஆலோசனைகளைத் தொடர்ந்து, கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலம், தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., என பல கட்சித் தலைவர்களிடமும் பேசிப் பார்த்துள்ளனர். எந்தக் கட்சியும் தே.மு.தி.க.,வை இணைத்துக் கொள்ள ஆர்வம் காட்டாததால், தே.மு.தி.க., மேல்மட்டத் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Comments