டில்லி - அரியானா இடையே ரோடக் - ரேவரி நெடுஞ்சாலையில் இன்று (டிச.,24) கடும் பனிமூட்டம் நிலவியது. இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகின. பனிமூட்டத்தால் விபத்து நடந்தது தெரியாமல் பின்னால் வந்த வாகனங்களும் ஒன்றின் மீது மற்றொரு என அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளாகின. பள்ளி வாகனம் உள்ளிட்ட 50 வாகனங்கள் இப்படி மோதின. இதில் 8 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அரியானா வேளாண் துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் நிவாரண வழங்குவதாக அரியானா அரசு அறிவித்துள்ளது. அரியானா, டில்லி, பஞ்சாப், உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பல பகுதிகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. மிகக் குறைந்த அளவே வெளிச்சம் காணப்படுகிறது.
Comments