
இன்னும் 7 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் வஜுபாய் வாலா பாஜகவுக்கு அவகாசம் அளித்துள்ளார். இதனிடையே பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகைக்கு காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சென்றுள்ளனர். அங்கு இரு கட்சியினரும் தங்களது பலத்தை நிரூபிக்க ஊர்வலமாக செல்ல முடிவு செய்து அனுமதி கேட்டனர். ஆனால் இவர்களது கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். இரு கட்சிகளைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டுமே ஆளுநரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தொண்டர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் ஆளுநர் மாளிகைப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
Comments