ஓகி புயல்.. மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம்!

DMK protest in chennai demanding to rescue missing fisherman from Kanniyakumari சென்னை: ஓகி புயல் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக்கோரி சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே திமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய ஸ்டாலின் ஓகி புயல் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மெத்தமான போக்கை கடைபிடித்ததாக குற்றம்சாட்டினார். முதல்வர் கன்னியாகுமரிக்கு சென்றதை வரவேற்கிறோம் என்ற ஸ்டாலின் ஆனாலும் இது காலங்கடந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார். புயலால் மாயமான மீனவர்களின் எண்ணிக்கையை கூட தமிழக அரசால் கணக்கெடுக்க முடியவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற கூட முதல்வருக்கு துணிச்சல் இல்லை என்றும் அவர் சாடினார். கன்னியாகுமரியில் புயலால் பாதிக்கப்பட்ட 30 கிராமங்களை தான் நேரில் சென்று பார்வையிட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மக்கள் பிரச்சனை என்பதால் மரியாதையை கூட எதிர்ப்பார்க்காமல் மாவட்ட ஆட்சியரை அவரது அலுவலகத்தில் சென்று பார்த்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை சந்திக்கவுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.

Comments