ஆய்வு கூட்டம் தொடரும்: கவர்னர் மாளிகை

ஆய்வு கூட்டம், Study Meeting,கவர்னர் மாளிகை ,Governor House,  கவர்னர் பன்வாரிலால் புரோஹித்,Governor Panwarilal Purohid,  மத்திய அரசு, Central Government,சென்னை: கோவையில் கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்தியதில் அரசியல் இல்லை என்றும் ஆய்வு கூட்டம் தொடரும் என கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

கோவையில் கடந்த வாரம் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அரசு உயரதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இதற்கு பல்வேறு கட்சிகளும் கடும் விமர்சனம் செய்தன. இதன் பின்னணியில் மத்திய அரசு உள்ளதாக குற்றம்சாட்டின.இது தொடர்பாக இன்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. 

அதன் விபரம்

இது போன்ற ஆய்வு பணிகள், கூட்டங்கள் நடத்துவது, அரசு நலத்திட்டங்களுக்கு ஆலோசனை வழங்கவே. கவர்னர் ஆய்வு கூட்டம் நடத்த அரசிலமைப்பு சட்டத்தில் இடம் உள்ளதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

கவர்னர் புரோஹித் அசாம் கவர்னராக இருந்த போது இது போன்ற ஆய்வு கூட்டங்கள் நடத்தியுள்ளார். எனவே இது போன்ற ஆய்வு பணிகள் தொடரும். மத்திய அரசின் தூண்டுதலால் கவர்னர் செயல்படுவதாக கூறுவது துரதிருஷ்டவசமானது. இவ்வாறு கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Comments