பட்டியல்
சென்னையில், நிருபர்களை சந்தித்த அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலின் போது ரூ.570 கோடி சிக்கிய பிரச்னை, நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு, சைதை துரைசாமி வீட்டில் நடந்த ரெய்டு, தமிழக தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவ் வீடு கோட்டையில் நடந்த ரெய்டு, மணல் மாபியா சேகர் ரெட்டி வீட்டில் நடந்த ரெய்டு, விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு, ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நிற்க காரணமான ரூ.89 கோடி கிடைக்க நடந்த ரெய்டு, கான்ட்ராக்டர் சுப்ரமணியம் வீட்டில் நடந்த ரெய்டு, குட்கா குடோனில் நடந்த ரெய்டு என என்னிடம் நீண்ட பட்டியல் உள்ளது.
பதில் இல்லை
இந்த சோதனை எல்லாம் வருமான வரித்துறை நடத்தியது. இதெல்லாம் என்ன ஆனது. என்ன நிலையில் உள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எந்த பதிலும் இல்லை. அது போல தான் இந்த ரெய்டும் இருக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சம்பந்தபட்ட மத்திய அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும். பிறகு நான் பதில் சொல்வேன். எந்த நோக்கத்திற்காக சோதனை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது பற்றி நீங்கள் கூறினால் நான் பதில் கூறுகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
Comments