மிக கனமழை
இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் கன்னியாகுமரியின் தென்கிழக்கே 500 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை பகுதியை கடந்து நாளை (நவ.,30) குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளக்கூடும். இதனால், அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர்,நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் பகுதியில் மழை அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தை பொறுத்தவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்கடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை பகுதியில் கனமழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை ஒட்டிய கடற்பகுதியில் மணிக்கு 50.கி.மீ., முதல் 60.கி.மீ.,வரை பலத்த காற்று வீசக்கூடும். கடல் சீற்றத்தடன் காணப்படும். இதனால், அடுத்த 2 நாட்களுக்கு கடற்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்
சென்னையில்
சென்னையைப் பொறுத்த வரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில் மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments