இந்நிலையில், பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு, புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்க பட்டார். கவர்னர் மாளிகை ஊழியர்கள், அங்கு நடைபெறும் முறைகேடுகளை, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதைத் தொடர்ந்து, அவர் அதிரடி மாற்றங்களை செயல்படுத்த துவங்கினார். தன்னை சந்திக்க வருவோர், பூங்கொத்து மற்றும் பழக்கூடை களைஎடுத்து வர தடை விதித்தார். முன்னாள் கவர்னரின் உறவினர்கள், விருந்தினர் மாளிகையில், 15 நாட்கள் வரை தங்க அனுமதி வழங்கப்படுவது வழக்கம். அதை, ஐந்து நாட்களாக குறைத்தார்.
கவர்னர் மாளிகை செலவுகளை குறைக்க உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக,கவர்னரின் செயலர் மாற்றபட்டு, மத்திய அரசு பணியில் உள்ள ராஜகோபால், புதிய செயலராக நியமிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியானது.
மேலும், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வருவதற்கு வசதியாக, மத்திய அரசுப் பணியில் உள்ள, பிரதமருக்கு நெருக்கமான, தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராஜகோபால், சோமநாதன் ஆகியோர், தமிழக அரசுப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர் என, சமீபத்தில் தகவல் வெளியானது.
அதேபோல், மத்திய அரசுப் பணியிலிருந்து, தமிழகம் திரும்பிய சோமநாதன், 23ம் தேதி, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சி கள் துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட் டார். நேற்று, மத்திய அரசுப் பணியிலிருந்து திரும்பிய ராஜகோபால், கவர்னரின் செயலராக நியமிக்கப்பட்டார். இது, அரசியல் வட்டாரத்தில், அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னர் செயலராக இருந்த, ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Comments