ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் - திருச்சி சிவா எம்.பி. தடாலடி

Trichy Siva M.P told DMK next agenda if Governor of TN not take proper actionகும்பகோணம்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடாவிட்டால் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவோம் என திமுகவின் திருச்சி சிவா எம்.பி கூறியுள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி திருச்சி சிவா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு தன் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். அவ்வாறு ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திப்போம் என கூறினார்.

முன்னதாக, சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏக்கள் சக்கரபாணி, ஜெ. அன்பழகன், ராஜேந்திரன் மற்றும் திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் ஆளுநரை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்களும் ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Comments