போர்க்கொடி
சட்டசபையில், 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்த, ஆறு மாதங் களு க்கு பின், முதல்வர்பழனிசாமி அணி, பன்னீர் செல்வம் அணியுடன், 22ம் தேதி இணைந்தது. அதை ஏற்காமல், தினகரன் போர்க் கொடி துாக்கியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவிக் கும், 19 எம்.எல்.ஏ.,க்கள் சார்பில், முதல்வரை பதவி நீக்கக் கோரி, கவர்னரிடம் மனு கொடுக் கப்பட்டு உள்ளது.
அதனால், அவர்களை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளார். இதற்கிடையே, இரு எம்.எல்.ஏ.,க் கள், அணி தாவியுள்ளதால், தினகரனின் பலம், 21 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நெருக்கடி கொடுக்கும் தினகரனுக்கு, 'செக்' வைக்க, முதல்வர் தரப்பில் முடிவு செய்துள்ளனர். அதற்காக, அ.தி. மு.க.,வின், எம்.பி., -எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, சென்னையில், நாளை அவசரமாக கூட்டி உள்ளனர்.
இதில், தினகரனுக்கு எதிராக, அதிரடி நடவடிக்கை இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், தினகரன் அணியினர்நடுக்கத்தில் உள்ளனர்.அதே நேரத்தில், சட்டசபை உரிமை குழுவும், நாளை கூடுகிறது. இந்த குழு கூட்டத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை, 'சஸ்பெண்ட்' செய்வது குறித்து, முக்கிய முடிவெடுக்கப்பட உள்ளது.
சட்டசபை விவாதத்தின் போது,தடை செய்தபோதை பொருளான, 'குட்கா'வை எடுத்து வந்ததற்காக, ஸ்டாலின் உள்ளிட்ட, தி.மு.க.,வினர் மீது, உரிமை மீறல் பிரச்னை, ஏற்கனவே கொண்டு வரப்பட்டு உள்ளது.இதில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு விட்டால், அவர்களால், நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டு விடும். அதனால், உரிமை குழு முடிவை எதிர்பார்த்து, தி.மு.க., தலைமை உள்ளது.
அச்சம்
இதற்கிடையில், கவர்னர் வித்யாசகர் ராவ், நேற்று மாலை சென்னை வந்துள்ளார். துணை ஜனாதி பதி வெங்கையா நாயுடு நிகழ்ச்சியில் பங்கேற் பதற்காக, அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், அவரை சந்தித்து, சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என, வலியுறுத்த, தி.மு.க., திட்டமிட்டுள்ளது. அதற்காக, தி.மு.க., தரப்பில், கவர்னரிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.
துரைமுருகன் தலைமையில், அக்கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், இன்று அல்லது நாளை, கவர்னரை சந்திக்கலாம் என, தெரிகிறது. அதை ஏற்று, சட்ட சபையை கூட்டி, பலப்பரீட்சைக்கு, கவர்னர் உத்தரவிடுவாரோ என்ற அச்சம், ஆளும் தரப்பில் ஏற்பட்டு உள்ளது.
Comments