கர்நாடக மருத்துவமனையில் 90 குழந்தைகள் பலி

கர்நாடகா, மருத்துவமனை, குழந்தைகள்பெங்களூரு : உ.பி.,யின் கோரக்பூரை தொடர்ந்து கர்நாடகாவிலும் மருத்துவமனையில் ஒன்றில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஒரே நாளில், பிறந்த உடனேயே 3 குழந்தைகள் உயிரிழந்தன. இது தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டு, முதல்வர் சித்தராமைய்யாவிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்த மருத்துவமனையில் அளிக்கப்பட்ட அலட்சியமான சிகிச்சை காரணமாக கடந்த 8 மாதங்களில் 90 குழந்தைகள் பிறந்த உடனேயே பலியாகி உள்ளன. 2015 ல் இதே மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 150 பிரசவங்கள் நடந்துள்ளன. தற்போது ஒரு மாதத்திற்கு 350 பிரசவங்கள் நடக்கின்றன. 2016 மட்டும் 82 குழந்தைகள் உயிரிழந்துள்ளன என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடுத்து கர்நாடக மனிதஉரிமை ஆணையத்தினர் மருத்துவமனையில் ஆய்வுக்கு சென்ற போது போதிய மின்சார வசதியும் மருத்துவமனையில் இல்லாதது தெரிய வந்துள்ளது.

Comments