நாளை(ஆக.,28)ராம் ரஹீமுக்கு தண்டனை:பலத்த பாதுகாப்பு

 நாளை,ராம் ரஹீமுக்கு,தண்டனை,பலத்த,பாதுகாப்பு சண்டிகர்:'தேரா சச்சா சவுதா' ஆன்மிக அமைப்பு தலைவர், குர்மீத் ராம் ரஹிம் சிங், இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளி என, உயர் நீதிமன்றம் அறிவித்தது. 

இதையடுத்து, வன்முறை கோர தாண்டவமாடிய, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களின் சில பகுதிகளில், ஊரடங்கு உத்தரவு நேற்று தளர்த்தப்பட்டது. அந்த பகுதிகளில், மயான அமைதி நிலவுகிறது. குர்மீத்துக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை, கோர்ட், நாளை (ஆக.,28)அறிவிக்கவுள்ளது. 

இன்று (ஆக.,27) காலை, நிலைமை சீரடைந்ததை அடுத்து, ஒரு சில பகுதிகளில், ஐந்து மணி நேரம், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும், அங்கு, இனம்புரியாத மயான அமைதி காணப்படுகிறது. சிர்சா நகரில், தேரா சச்சா தலைமையகத்தை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஊரடங்கு உத்தரவு, ஐந்து மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஹரியானா மாநிலம், ரோடக் நகரில், சுனரியா சிறையில், குர்மீத் அடைக்கப்பட்டுள்ளார். (.,28), தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளதால், ரோடக் நகரில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குர்மீத்துக்கு வழங்கப்படும் தண்டனையை அறிவிக்க, நீதிபதி, விமானத்தில் அழைத்து வரப்பட உள்ளார். சிறைச்சாலைக்கு வந்து, தண்டனை விபரத்தை நீதிபதி அறிவிப்பார் என, தகவல்கள் கூறுகின்றன. 

ஹரியானாவில், பஞ்ச்குலா, சிர்சா, ரோடக், பதேஹாபாத் ஆகிய மாவட்டங்களில், பதற்றம் நிறைந்த பகுதிகளிலும், பஞ்சாப் மாநிலத்தின் சில இடங்களிலும், பாதுகாப்பு படை வீரர்கள், கொடி அணி வகுப்பு நடத்தினர். முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுஉள்ளது.

Comments