சசியை சிக்க வைத்த ரூபா யார்?

சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா, சிறை, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, சிவில் சர்வீஸ் தேர்வு, உமாபாரதி, கைதுபெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டுள்ளது என குற்றம் சாட்டியுள்ள கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, இதற்கு முன் தற்போதைய மத்திய அமைச்சர் உமாபாரதியை கைது செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறி பார்த்து சுடுவதில் வல்லவர்

கர்நாடக மாநிலம், தேவங்கரே பகுதியை சேர்ந்தவர் ரூபா. இவர் சிவில் சர்வீஸ் தேர்வில், 2000ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்; தேர்ச்சி அடைந்தவர்கள் பட்டியிலில், 43வது இடம் பிடித்தவர். ஐதராபாத்தில் ஐ.பி.எஸ்., பயிற்சி பெற்ற போது, ஐந்தாவது இடத்தை பிடித்தவர். குறி பார்த்து சுடுவதில் திறன் மிகுந்தவர். தேசிய போலீஸ் அகாடமியில் பல விருதுகளை பெற்றவர். 2016ம் ஆண்டு ஜன., 26ம் தேதி ஜனாதிபதி விருது பெற்றவர்.

பரத நாட்டியம் பயின்றவர்

ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா, முறையாக பரத நாட்டியம் பயின்றவர். அதே போல், இந்துஸ்தானி இசையையும் பயின்றவர். மத்திய பிரதேச முதல்வராக இருந்த உமாபாரதியை, நீதிமன்ற உத்தரவின் பேரில்கைது செய்தவர். பெங்களூருவில், துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றிய போது, வி.வி.ஐ.பி.,க்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு தேவையில்லாமல் அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றவர். அதே போல் ஆயுதப்படை டி.சி.பி.,யாக பணியாற்றி போது, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா வாகன அணிவகுப்பில், அனுமதி பெறாமல் இடம் பெற்று வந்த வாகனங்களை திரும்ப பெற்று அசத்தியவர். சமீபத்தில், நான்கு சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கு சென்ற போது மைசூரு குடகு எம்.பி., பிரதாப் சிம்ஹாவுடன் டுவிட்டர் இணைய தளத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments