
சென்னை : தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.,வுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஜாமின் வழங்கி உள்ளது. 2009 ம் ஆண்டு தொடரப்பட்ட தேச விரோத வழக்கில் வைகோவுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஏப்ரல் 3 ம் தேதி சரணடைந்தார். இதுவரை ஜாமின் மனு தாக்கல் செய்வதை தவிர்த்து வந்த வைகோ, நேற்று திடீரென ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு வழக்கறிஞர், வைகோவை சிறையில் வைத்திருப்பதால் தமிழக அரசுக்கு தேவையில்லாத செலவு ஏற்படுகிறது. அதுனால் அவரை ஜாமினில் விடலாம் என்றார். இதையடுத்து வைகோவுக்கு நிபந்தனையில்லா ஜாமின் வழங்கப்பட்டது.
Comments