தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றி: ஓ.பி.எஸ்., பேச்சு

சென்னை: சசிகலா குடும்பத்தை அதிமுகவிலிருந்து நீக்கி வைத்திருப்பது தர்ம யுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்கள் பி.எச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன், செம்மலை ஆகியோருடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய பன்னீர் கூறியதாவது: அதிமுகவை மக்கள் இயக்கமாக உருவாக்கினார் எம்ஜிஆர். அவரது கொள்கைப்படி தொண்டர்கள், மக்கள் இயக்கமாக ஜெ., வழி நடத்தினார். ஜெ., மரணத்திற்கு பின் கட்சி சசி குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக தர்ம யுத்தம் துவக்கப்பட்டது.

மக்கள் விருப்பத்திற்காக தான், எம்ஜிஆர் ஜெ., கொள்கைபடி, எங்கள் அடிப்படை கருத்தாக வைத்து தர்ம யுத்தம் துவக்கினோம். தர்மயுத்தத்திற்கு முதல் வெற்றியாக சசி குடும்பத்தை விலக்கி வைப்பது என அவர்கள் தரப்பில் முடிவு எடுத்துள்ளார்கள். தொடர்ந்து எங்கள் தர்மயுத்தம் எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ, அதன்படி தொடர்ந்து மக்களுடைய எண்ணப்படியும், தொண்டர்கள் விருப்பப்படியும் அறப்போராட்டம் வலுப்பெறும். 

அதிமுக தொண்டர்கள் இயக்கமாக இருக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments