
சென்னை : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் போட்டியிடும் டிடிவி தினகரனின் வேட்புமனு ஏற்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில் 3 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 3 பேரின் மனு ஏற்ற ஐகோர்ட், இன்று அவசர வழக்காக விசாரிப்பதாக தெரிவித்துள்ளது. அதிமுக பெயரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் தினகரனை சுயேட்சை வேட்பாளராக மட்டுமே கருத வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments