அதிகாரம்:
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்தது.இதன் பின்னர் அதிமுக ஓ.பி.எஸ்., அணியின் ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் தொடர்பாக அளித்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. எங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன், குரு கிருஷ்ணகுமார், மனோஜ் பாண்டியன் வாதாடினர். அழுத்தமாக, உறுதியான வாதத்தை எடுத்து வைத்தனர். சட்டவிதிகளின்படி தேர்தல் சின்னமானது வேட்பாளர்களுக்கு பொது செயலாளரால் மட்டுமே கொடுக்க முடியம். பொது செயலாளர் இல்லாத போது அவைத்தலைவர் மதுசூதனனுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் அதிகாரம் கிடையாது. எங்களுக்கு சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. வேட்பு மனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், இன்றே தேர்தல் ஆணையம் முடிவு அறிவித்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
மனோஜ் பாண்டியன் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இயங்கும் அதிமுக தான் உண்மையான அதிமுக. அவர்களுக்கு இரட்டைஇலை ஒதுக்க வேண்டும் எனக்கூறினோம். அடிப்படை உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக உள்ளனர் என்பதை எடுத்துரைத்தோம். அபிடவிட்டில் ஓ.பி.எஸ்., ஆதரிக்கிறோம் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளதை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தோம். இரட்டை இலை சின்னத்தை பொது செயலாளர் தான் ஒதுக்க முடியும். சசியால் முடியாது என தெரிவித்தோம். குற்றவாளியாக இருக்கும் சசி பொது செயலாளராக இருக்க முடியாது என எடுத்துரைத்தோம். இவ்வாறு அவர் கூறினார். சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம், தேர்தல் ஆணையம் தனது முடிவை நாளை அறிவிக்கும் எனக்கூறினார்.
Comments