தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள், முழு அளவில் வழங்கப் படவில்லை. இதனால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில், அடுத்த மாதம், 12-ல், இடைத்தேர்தல் நடக்கிறது. ஆட்சி, பணம், அடியாட்கள் பலத்தை பயன்படுத்தி, சசிகலா அணியைச் சேர்ந்த, தினகரன் வெற்றி பெற திட்டமிட்டுள்ளார்.
இதற்காக, அமைச்சர்கள் அனைவரும், தேர்தல் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், ரேஷனில் பொருட்கள் கிடைக்காத விரக்தியில் உள்ள பொதுமக்கள், அமைச்சர்களை ஆங்காங்கே முற்றுகையிட்டு, கேள்வி கேட்டு வருகின்றனர்.
இது குறித்து, ஆர்.கே.நகர் பகுதிவாசிகள் கூறிய தாவது: ரேஷனில் பொருட்கள் கிடைக்காமல், மக்கள் அவதிப்படும் போது, முதல்வரும், அமைச்சர் களும், ஆட்சியை பிடிக்க, சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன், கூவத்துார் விடுதியில் முகாமிட்டிருந்தனர். அப்போது, குறைகள் கேட்க யாரும் வரவில்லை.
இப்போது, தினகரனுக்கு ஓட்டு கேட்டு, அமைச்சர் கள் வருகின்றனர்.அவர்களிடம் ரேஷன் பிரச்னை குறித்து கேள்வி கேட்டால், பதில் கூற முடி யாமல் ஓடுகின்றனர். உணவு துறை அமைச்சர் காமராஜ், கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு இருவரும், மக்களை சந்திக்க பயந்து, நடந்து வந்து ஓட்டு கேட்காமல், வாகனத்தில் நின்ற படி ஓட்டு கேட்டு செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Comments