தேனியில் தொண்டர் கூட்டம் ஓபிஎஸ் முதல்வராக இருந்த காலகட்டத்தில் தேனி மாவட்டத்துக்கு வந்த போதும் இவ்வளவு வாகனங்கள் அவருடன் அணிவகுத்து வந்தது கிடையாது. மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த போது ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்கு வந்த நாட்களில் கூட இவ்வளவு வரவேற்பு கொடுக்கப்பட்டது இல்லை. ஆனால் சசிகலாவுக்கு எதிராக முஷ்டியை முறுக்கிய பிறகு ஆதரவு அதிகரித்து காணப்பட்டது.
திறந்த ஜீப் அதேபோல ஆர்.கே.நகரிலும் இன்று மக்கள் அலை, அலையாய் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். வேட்பாளர் மதுசூதனனுடன், பன்னீர் செல்வம் திறநத் ஜீப்பில் நின்றபடி பிரசாரத்தில் ஈடுபட்டார். மேள தாளங்கள் முழங்க திரளான தொண்டர்கள் அதில் பங்கேற்று வீதி, வீதியாக வாக்கு சேகரித்தனர்.
ஆர்.கே.நகருடன் நெருக்கம் வர்தா புயல் சேத காலகட்டத்தில் ஆர்.கே.நகர் உள்ளிட்டசென்னையின் பல பகுதிகள் சேதமடைந்தன. அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் சிறப்பான வகையில் மீட்பு பணிகளை மேற்கொண்டார். இதனால் அவர் மீது ஆர்.கே.நகர் மக்களுக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உள்ளது. மேலும், மதுசூதனன் ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் என்பதால், தொண்டர் பலமும் அதிகம் காணப்படுகிறது.
கூட்டமோ கூட்டம் டிடிவி தினகரன், கங்கை அமரன் பிரசாரங்களின்போது இல்லாத அளவுக்கு பெருமளவில் திரளாக மக்கள் கூட்டம் கூடியிருந்ததை பார்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளது. தோல்வி பயத்தால், இரட்டை மின் விளக்கு சின்னத்திற்கு எதிராக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் பேட்டியின்போது தெரிவித்தார்.
Comments