பொதுச்செயலாளரான ஜெ.,க்கு பிறகு, கட்சி யின் அவைத்தலைவர் மதுசூதனன், பொருளா ளராகிய நான் உட்பட தலைமை நிர்வாகி களுக்கு மட்டுமே அனைத்து முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உள்ளது. அப்படி இருக்கை யில் தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்தது செல்லாது. பொதுக்குழு, லோக்சபா எம்.பி.,க்கள் தவிர கட்சியினர்தான் தேர்வு முறையில் ஒருவரை பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்க வேண்டும். குடும்ப ஆட்சி நடக்கக் கூடாது என்பதில் ஜெ., உறுதியாக இருந்தார். தற்போது ஒரு குடும்பத்தினர் கட்சி, ஆட்சிநடத்துகின்றனர். இது ஜெ.,கொள்கைக்கு விரோதமானது.
இந்திய தேர்தல் கமிஷனிடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளோம். மார்ச் 22ல் அ.தி.மு.க., விதிமுறைகளை அதனிடம் எடுத்து சொல்வோம். அ.தி.மு.க., எங்கள் கட்சி. எனவே இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் நாங்கள் பெறுவோம். புதிய கட்சி துவங்கும் எண்ணம் இல்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.
ஜெ., 2011ல் தினகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவரை கட்சியில் இருந்து வெளியேற்றி னார். ஜெ., உயிரோடு இருந்தவரை தினகரன் கட்சிக்கு வரவில்லை. பொதுவாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர் கள் மீண்டும் கட்சி யில் இணைந்தால், 5 ஆண்டுகள் எந்த பதவிக்கும், தேர்தலிலும் போட்டியிடக் கூடாது.
ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிடு வது கட்சிக்கு விரோதமான செயல். அத்தொகுதியில் ஜெ., கொள்கை, கோட்பாடு, நியாயத்தை முன்னி றுத்தி தேர்தல் வியூகம்அமைத்து, மக்களை சந்தித்து வெற்றி பெறுவது உறுதி. எம்.எல்.ஏ.,க் கள் மக்களை எவ்வாறு சந்தித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையி னர் தாக்குவது கண்டிக்கத்தக்கது. நீர் உற்பத்தி செய்யும் மாநிலம், நீர் பெறும் மாநிலத்திற்கு தண்ணீர் மறுக்கும் பட்சத்தில், ஜெ., உச்சநீதி மன்றத்தை அணுகி நீர் கிடைப்பதற்கு வழி வகுப்பார். தற்போது அந்த நிலை பின்பற்றப் படவில்லை, என்றார்.
Comments