லஞ்சம் - இந்தியா முதலிடம்

தினமலர் செய்தி : புதுடில்லி : ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள, 16 நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், அதிகமாக லஞ்சம் புழங்கும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு பேர் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

ஜெர்மனியைச் சேர்ந்த லஞ்சத்துக்கு எதிரான உரிமைகள் அமைப்பான, 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' என்ற அரசு சாரா அமைப்பு, ஆசியா - பசிபிக் பிராந்தியத்தில், லஞ்சம் குறித்த ஆய்வை மேற்கொள்கிறது. கடந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:

ஆசியா - பசிபிக்கில் உள்ள, 16 நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே நடத்திய கருத்துக் கணிப்பில், லஞ்சம் கொடுத்ததாக, 69 சதவீத இந்தியர்கள் கூறியுள்ளனர்; இது, இந்த பிராந்தியத்திலேயே மிகவும் அதிகமாகும்; அதாவது, இந்திய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

வியட்நாம், 65 சதவீதத்துடன் இரண்டாம் இடத் தில் உள்ளது. சீனாவில், இது, 26 சதவீதமாக வும், பாகிஸ்தானில், 40 சதவீதமாகவும் உள்ளது. ஜப்பானில் தான் மிகவும் குறைந்த அளவான, 0.2 சதவீதம் பேரே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர். தென்கொரியா வில், 3 சதவீதம் பேர் மட்டுமே லஞ்சம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

அதே நேரத்தில், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகை யில், லஞ்சம் கொடுப்பது அதிகரித்துள்ள நாடு களில், சீனா முதலிடத்தில் உள்ளது. 73 சதவீதம் பேர் லஞ்சம் கொடுக்க நேர்ந்ததாக கூறியுள்ளனர். இந்தப் பட்டியலில், 41 சதவீதத்துடன், இந்தியா, ஏழாவதுஇடத்தில் உள்ளது.

எந்தத் துறைக்கு அதிகம் லஞ்சம் தர வேண்டியுள்ள பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. போலீசுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளதாக கூறியுள் ளவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய மக்களே.இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறியதாவது:

லஞ்சத்துக்கு எதிரான சட்டங்கள் வலுவில்லாமல் இருப்பதும், அவை முறையாகவும், கடுமையாகவும் பயன்படுத்தப்படாததுமே, லஞ்சம் பரவியுள்ளதற்கு முக்கிய காரணம். லஞ்சம் என்பது ஒரு சாதாரண குற்றமல்ல. அது ஒருவரது உணவை பறிக்கிறது; கல்வியை பறிக்கிறது; சுகாதாரத்தை பறிக்கிறது. இறுதியில் உயிரையே பறிக்கிறது. நாடு முன்னேற் றம் அடைய, லஞ்சம் இல்லாத நிலையை உரு வாக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

போலீஸ் லஞ்சவாதிகள்;சாமியார்களும் சரியில்லை!

இந்தியாவில் லஞ்சம் அதிகம் வாங்குபவர்கள் யார் என்ற பட்டியலில், போலீஸ் முதலிடத்தில் உள்ளது. லஞ்சவாதிகள்பட்டியலில், சாமியார்களும் இடம் பெற்றுள்ளனர்.'டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்' வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

இந்தியாவை பொறுத்தவரை, லஞ்சவாதிகள் பட்டிய லில், 85 சதவீதத்துடன் போலீஸ் முதலிடத்தில் உள்ளது. அரசு அதிகாரிகள், 84 சதவீதம்; நிறுவன அதிகாரிகள், 79 சதவீதம்; உள்ளாட்சி கவுன்சிலர்கள், 78 சதவீதம்; பார்லிமென்ட் உறுப்பினர்கள், 76 சதவீதத்துடன் அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில், 74 சதவீதத்துடன் வரித் துறை அதிகாரிகளும், 71 சதவீதத்துடன் சாமியார்களும் உள்ளனர்.

அதே நேரத்தில், பிராந்தியத்தின் மற்ற நாடுகளில், சாமியார்கள், லஞ்சவாதிகள் பட்டியலில் கீழ் நிலையில் உள்ளனர். போலீஸ், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். கல்வி, சுகாதார துறைகளில், மற்ற நாடுகளை விட, இந்தியா வில் தான் அதிக அளவுக்கு லஞ்சம் புழங்கு கிறது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது. 

இந்தியாவில், பொது சேவையில் லஞ்சம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறுவதில், கல்வி, மருத்துவம், அடையாள அட்டை மற்றும் சான்றுகள் ஆகியவை முக்கியமான தாக கூறப்படுகின்றன.இவ்வளவு இருந்த போதும், லஞ்சத்தை ஒழிக்க, அரசு மேற் கொண்டு வரும் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை உள்ளதாகவும் மக்கள் நம்பிக்கை அதிகம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.இவ்வாறு ஆய்வறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Comments