தினமலர் செய்தி : சென்னை: தமிழக அரசின் நிதித்துறை செயலர் சண்முகம் அளித்த பேட்டி: வேலைவாய்ப்புக்கு முக்கியமான சிறுகுறு தொழில்கள் துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் கொடுத்துள்ளோம். 3 முக்கிய திட்டங்கள் இந்தாண்டு செயல்படுத்தப்படும். திட்டங்களை முன்னிலைப்படுத்தி வரவு செலவு செய்யப்படுகிறது.
5 திட்டங்களை முன்னிலைப்படுத்தி ரூ.12, 764 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பு , குடிமராமத்துபணி, தூய்மை உள்ளிட்ட 5 திட்டங்கள் முன்னிலைப்படுத்தி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் போதுமானதாக இல்லை. மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. மத்திய அரசிடமிருந்து ரூ.5000- ரூ.6000 கோடி வர வேண்டியுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டம் போன்ற திட்டங்கள் பிற மாநிலங்களில் இல்லை. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களை தமிழகம் செயல்படுத்தி வருகிறது. பிற மாநிலங்களில் இல்லாத திட்டங்களால் ரூ.7000 கோடி செலவு ஏற்படுகிறது. இது போன்ற திட்டங்களால் ஏற்படும் வருவாய் இழப்பால் நிதிப்பற்றாக்குறை ஏற்படுகிறது. வருவாய் பற்றாக்குறை சென்ற ஆண்டுநிலையிலேயே உள்ளது . அதிக முதலீடுகளை கவர புதிய ஊக்குவிப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவிகள் கிடைக்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments