ஆர்கே.நகரில் தினகரன்.. கார்களில் திரண்ட ஆதரவாளர்கள்.. பயங்கர டிராபிக் ஜாம்.. மக்கள் கடும் அவதி

TTV.Dinakaran is in RK.Nagar now with his supporters due to this heavy traffic jam in the areaசென்னை: தண்டையார்பேட்டையில் டிடிவி.தினகரன் வருகையால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தினகரனின் ஆதரவு நிர்வாகிகள் ஏராளமான கார்களில் திரண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே.நகர் தொகுதியில் சசிகலா தரப்பு அதிமுக இன்று தேர்தல் பணிமனையை திறக்கவுள்ளது. இதற்காக டிடிவி.தினகரன் ஆர்கே.நகர் தொகுதிக்கு சென்றுள்ளார்.


இதைத்தொடர்ந்து நடைபெறும் அதிமுக ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பங்கேற்கவுள்ளார். இதற்காக அவரது ஆதரவாளர்களும் சசிகலா தரப்பு அதிமுக நிர்வாகிகளும் ஏராளமான கார்களில் அங்கு திரண்டுள்ளனர். இதனால் அங்கு பயங்கர போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அலுவலகங்கள் முடித்து வீட்டுக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

Comments