அவர் மேலும் கூறியதாவது:
கர்நாடகாவைப் பொறுத்த வரையில், சிறைக்கு வந்து விட்டால், சிறை விதிகள் என்ன சொல்கிறதோ, அதைத்தான் பின்பற்றுவோம். சிறப்பான சலுகைகள் எதையும் வழங்க மாட்டோம். ஆனால், அ.தி.மு.க., நியமனப் பொதுச் செயலர் சசிகலாவுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக, சொல்லப்படுவது தவறு. எல்லோருக்கும் என்னன்ன சலுகைகள் வழங்கப்படுகிறதோ, அதுதான் அவருக்கும் வழங்கப்படுகிறது. இதை சசிகலாவும் நன்கு உணர்ந்துள்ளார். அதனால், அவர், சிறை நிர்வாகத்திடம் சிறப்பான சலுகைகள் வழங்குமாறு கேட்கவில்லை.
சிறையில், சசிகலாவும், இளவரசியும் ஒரே அறையில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. சசிகலாவை சிறையில் சந்திக்க, கட்சியினர் நிறைய பேர் வருகின்றனர். அவர்கள் பற்றிய விவரங்கள் சசிகலாவுக்கு அளிக்கப்படுகிறது. அதில் யாரையெல்லாம் சந்திக்க விரும்புகிறாரோ, அவர்கள் மட்டுமே, சசிகலாவை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளியிலிருந்து கொண்டு வரப்படும் வீட்டு உணவு, சசிகலாவுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவே, அவருக்கும் வழங்கப்படுகிறது. அதைத்தான் சசிகலா சாப்பிடுகிறார். எங்களைப் பொறுத்த வரையில், எல்லா கைதிகளைப் போலத்தான் சசிகலாவும். அவர், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் என்பதெல்லாம், அவரது கட்சியினருக்கு மட்டும்தான்.
சிறை மாற்றம் தொடர்பாக இதுவரை, எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. சிறையில், சசிகலாவுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments