இரட்டை இலை யாருக்கு?: சசிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தினமலர் செய்தி : சென்னை: இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிமுக சசிகலா அணி சார்பில் தினகரனும், அதிமுக ஓ.பி.எஸ்., அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர்.

இரட்டை இலை யாருக்கு?

ஓ.பி.எஸ்., தரப்பினர் தேர்தல் கமிஷனிடம் மனு அளித்தனர். எங்களுக்கே இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரினர். இந்த விஷயத்தில் வரும் 20ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Comments