தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் ஹேக்கர்களால் முடக்கம்

தினமலர் செய்தி : சென்னை: தமிழக அரசின் இணையதளம் நேற்று முடக்கப்பட்டது. இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது.

தகவல்கள் மாயம்:

தமிழக அரசின் இணையதளமான www.tn.gov.in ல் தமிழக அரசின் அறிவிப்புகளும், மாநிலம் குறித்த முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும் மீறி முடக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய பக்கங்களை பார்வையிட முடியவில்லை. தமிழக அரசின் இணையதளம் முடக்கப்பட்டதை, தேசிய தகவல் மையமும் உறுதி செய்துள்ளது. பேக் அப் சர்வரில், இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய கோப்புகள் திருடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இணையதளம் முடக்கப்பட்டதால், ஆவணங்கள் எதுவும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. தற்போது இணையதளத்தை சீர்செய்யும் பணி நடந்து வருகிறது. 

பின்னணி:

இதன் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments