வீட்டில் செவ்வாய்க்கிழமை மாலை சீனிவாசன், செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தாராம். அப்போது தரணி சென்று, நானும் பாட்டு கேட்கிறேன் என்று கேட்டிருக்கிறார். இதில் கோபம் அடைந்த சீனிவாசன், இப்போதுதான் நான் பாட்டு கேட்கிறேன். அதற்குள் ஏன் அவசரம் என்று கோபத்தில் செல்போனை தூக்கி வீசியுள்ளார். இதனிடையே இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மயங்கிய நிலையில் தரணி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தபோது அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. சிறிது நேரத்தில் தரணி இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தரணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், ''செல்போனில் பாட்டு கேட்பதில் எனக்கும் மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. அவரை பிடித்து தள்ளியதில் சுவரில் மோதி தலையில் காயம் அடைந்தார். இதனால் தரணி இறந்துவிட்டார்' என்றார். இதன் அடிப்படையில், சீனிவாசனை போலீசார் கைது செய்தனர்.
Comments