மாணவர் மாயம்
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை. வளாகத்தில் நேற்று இரவு 11 மணியளவில் 200-க்கும் மேற்பட்டமாணவர்கள் பல்கலை. நிர்வாக அலுவலகத்தினை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். அப்போது பல்கலை. விடுதியில் தங்கி படித்து வந்த நஜிப் அகமது என்ற மாணவர் கடந்த நான்கு நாட்களாக காணவில்லை எனவும் அவரை கண்டு பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.
நள்ளிரவில் பரபரப்பு
அகில இந்திய மாணவர் சங்கத்தினர் 200 க்கும் மேற்பட்டோர் பல்கலை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதுகுறித்து, பல்கலை. மாணவர்கள் சிலர் கூறுகையில், பல்கலை., விடுதியில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கின்றன. மாணவர்கள் சிலர் மீது வன்முறை தாக்குதல் நடக்கின்றன.இதில் பாதிக்கப்பட்ட ஒருமாணவர் தான் நஜிப் அகமது காணமால் போயுள்ளார். இவர் தற்போது எங்குள்ளார் என தெரியவில்லை என்றார்.
Comments