காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் மற்றும் கர்நாடகாவில், கள ஆய்வு செய்து, 40 பக்க அறிக்கையை, நேற்று முன்தினம் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மறு உத்தரவு வரும் வரை காவிரியில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கோர்ட் உத்தரவிட்டது. இன்றும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஒத்திவைப்பு:
இன்று வழக்கு விசாரணை வந்தது. விசாரணைக்கு பின்னர், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மறு உத்தரவு வரும் வரை காவிரியில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் அறிவித்தனர். காவிரி நடுவர் மன்ற தீர்பபுக்கு எதிரான வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பான வழக்கின் மீதான தீர்ப்பையும் ஒத்திவைப்பதாகவும், மத்திய அரசு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்யவும், திங்கட்கிழமைக்குள் வாதத்தை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments