நோட்டீஸ்:
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த பொதுநல மனு: தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால், பண்டிகைக் காலங்களில் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
தமிழகம் முழுவதும், ஆம்னி பஸ்களின் கட்டணத்தை வரன்முறைப்படுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, பதிவாளர் மனு செய்திருந்தார். இதை நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அடங்கிய அமர்வு நேற்று தானாக முன்வந்து, விசாரணைக்கு ஏற்றது. மதுரை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆஜராயினர்.இது தொடர்பாக, தமிழக உள்துறை மற்றும் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலர்கள், போக்குவரத்து கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எச்சரிக்கை:
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பஸ் கட்டணத்தை உயர்த்தக்கூடாது. கடந்த தீபாவளிக்கு வசூலித்த கட்டணத்தையே தற்போதும் வசூலிக்க வேண்டும். ஆம்னி பஸ்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாவட்ட கலெக்டர்கள் கண்காணிக்க வேண்டும். உத்தரவை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறினர். தொடர்ந்து வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதி ஒத்திவைத்தனர். கட்டண நிர்ணய குழு அமைப்பது பற்றி அன்று முடிவு செய்யப்படும் என நீதிபதிகள் கூறினர்.
Comments