தமிழகம், புதுச்சேரியில் மழை; வானிலை

தினமலர் செய்தி : சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியுள்ளார் .அவர் மேலும் கூறியதாவது: வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலு குறைந்து இன்று காலை இலங்கை மற்றும் குமரி கடல் அருகே தாழ்வு நிலையாக உள்ளது . இதனால் வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். தெற்கு உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் . சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். தென் கடலோர மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். வட கடலோர மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நன்னிலம், மரக்காணம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக 10 செ மீட்டர் மழையும், பண்ருட்டியில் 9 கடலூரில் 8 செ மீட்டர் மழையும் பெய்துள்ளது . இவ்வாறு ரமணன் தெரிவித்தார் .

Comments