தினமலர் செய்தி : மும்பை : சென்னை, கடலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவிகள் என பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள பாலியல் தொழிலாளிகள், சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூ. 1 லட்சம் வழங்கியுள்ளனர். தினசரி 1 வேளை மட்டும் சாப்பிட்டதன் மூலம் சேமித்த இந்த பணத்தை, நிவாரண நிதியாக வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Comments